படம்: டார்லிங் டார்லிங் டார்லிங்.
இசை: ஷங்கர் - கணேஷ்.
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்.
வரிகள்: குருவிக்கரம்பை சண்முகம்.

ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
(ஓ நெஞ்சே..)

ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
(ஓ நெஞ்சே..)

தென்னங்கிளி தான் நீ சொல்லும் மொழி தேன்
சங்கீதம் பொங்காதோ உன் சின்னச் சிரிப்பில்
செந்தூரம் சிந்தாதோ உன் கன்னச் சிவப்பில்
என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை
கண்ணீரில் தாலாட்டினாள்
என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை
கண்ணீரில் தாலாட்டினாள்
(ஓ நெஞ்சே..)

உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால்
உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால்
அந்நாளே பொன்னாளாய் என் ஜென்மம் விடியும்
எந்நாளும் பன்னீரில் என் நெஞ்சம் நனையும்
கொத்தான முல்லை பித்தான என்னை
எப்போதும் முத்தாடுவாள்
கொத்தான முல்லை பித்தான என்னை
எப்போதும் முத்தாடுவாள்
(ஓ நெஞ்சே..)

விரும்பிக்கேட்டவர் கார்க்கி.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 4 )

பாடியவர்: மால்குடி சுபா.

வால்பாற வட்டப்பாற
மயிலாடும் பாற மஞ்சப்பாற
நந்திப்பாற சந்திப்பார
அவரு என்ன மட்டும் சிந்திப்பார
பார என்னப் பார

எட்டிப் பாத்து நிப்பார
ஏங்கி ஏங்கி பாப்பார
ஏரிக்கர ஓரத்திலே காத்திருப்பார...

ரெண்டுக்கன்னம் தேன் பாற
விண்டு விண்டு திம்பார...

வால்பாற வட்டப்பாற
மயிலாடும் பாற மஞ்சப்பாற
பார என்னப் பார

செம்பருத்தி நெஞ்சார
சம்மதத்த கேட்பார
சாதிசனம் சேர்ந்திருக்க கைப்பிடிப்பார...

வம்பளக்கும் ஊர் வாய
வாயடைக்க வெப்பார

வால்பாற வட்டப்பாற
மயிலாடும் பாற மஞ்சப்பாற
பார என்னப் பார

தொட்டா மணப்பாற
நெய்முறுக்க கேட்பார
நெய்முறுக்கு சாக்குல என் கைக்கடிப்பார...

பாலிருக்கும் செம்பால
பசி தாகம் தீப்பார

வால்பாற வட்டப்பாற
மயிலாடும் பாற மஞ்சப்பாற
பார என்னப் பார

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 4 )