வேல வேல வேல...


படம்: அவ்வை சண்முகி.
பாடியவர்: S.P.B.
இசை: தேவா.
வரிகள்: வைரமுத்து.

வேல வேல வேல மேல வேல வேல
ஆம்பளைக்கும் வேல பொம்பளக்கும் வேல
பொம்பளையா போன ஆம்பளைக்கும் வேல

கால மால மால கால மேல மேல வேல வேல
எத்தனையோ வேல எப்பவுமே வேல
அத்தனைக்கும் உண்டு வெற்றியென்னும் மால

சண்முகா..ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
உனது படைப்பில் உயர்ந்து விளங்கும் பெண்ணய்யாஆஆஆஆ
அவ்வ்வை சண்முகி...

அவ்வ்வை சண்முகி...
வேல வேல வேல மேல வேல வேல
ஆம்பளைக்கும் வேல பொம்பளக்கும் வேல
பொம்பளையா போனா ஆம்பளைக்கும் வேல

ஹெய் ஹெய் ஹெய் ஹெய் ஹெய் ஹெய்
ஹெய் ஹெய் ஹெய் ஹெய் ஹெய் ஹெய்

ஹெய் ஹெய் ஹெய் ஹெய் ஹெய் ஹெய்
ஹெய் ஹெய் ஹெய் ஹெய் ஹெய் ஹெய்

ஆத்தாடி இந்த மாமிதான்
கூத்தாடும் அர்த்தநாரி தான்
Duel Role இந்த வேஷம் தான்
ஏனென்றால் பிள்ளை பாசம் தான்
காளை உண்டு கன்றுக்காக
கறவை மாடாய் ஆளாக்கி
ஈன்றெடுத்த கன்றுக்கு இப்போ
இங்கிருந்து தாயாக்கி..
இது ஒரு அதிசயம்.. தனிப்பட்ட ரகசியம்
ரீபப்பா பரபப்பா.. தரத்தார ரிபப்பா
சிகுச்சக்கா சிகுச்சா.. ஜூஜூஜூஜூ

சண்முகா..ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
உனது படைப்பில் உயர்ந்து விளங்கும் பெண்ணய்யாஆஆஆஆ
அவ்வ்வை சண்முகி...

கால மால மால கால மேல மேல வேல வேல
எத்தனையோ வேல எப்பவுமே வேல
அத்தனைக்கும் உண்டு வெற்றியென்னும் மால

பார்த்தாச்சு பல மேடைதான்
போட்டாச்சு பல வேஷம தான்
ஆனாலும் இது வித்தியாசம்
தந்தைக்கு ஹ்ஹ இங்கு தாய்வேஷம்

ஆராரிராரோ ஓஓஓஒ.. ஓஓஓஒ
ஆரிராரோஓஓ..ஆரிராரோஓஓ
ஆரிராரோஓஓ

பாட்டிருந்து பாடப்பாட
தூங்குதம்மா சேய் கேட்டு
பாசமுள்ள பாட்டைக்கொஞ்சம்
தடுப்பதுண்டோ ஹைக்கோர்ட்டு

இளமையும் உடலையும் உனக்கென்ன பிரிப்பது
ரீபப்பா ரிபப்பா.. . தரத்தார ரிபப்பா
ஜுதததா ததத்தா சிகுச்சக்கா சிகுச்சா..

சண்முகா..ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
உனது படைப்பில் உயர்ந்து விளங்கும் பெண்ணய்யாஆஆஆஆ
அவ்வ்வை சண்முகி...

வேல வேல வேல மேல மேல வேல வேல
ஆம்பளைக்கும் வேல பொம்பளக்கும் வேல
பொம்பளையா போனா ஆம்பளைக்கும் வேல

கால மால மால கால மேல மேல வேல வேல
எத்தனையோ வேல எப்பவுமே வேல
அத்தனைக்கும் உண்டு வெற்றியென்னும் மால

சண்முகா..ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
உனது படைப்பில் உயர்ந்து விளங்கும் பெண்ணய்யாஆஆஆஆ
அவ்வ்வை சண்முகி...

விரும்பிக்கேட்டவர் கார்க்கி.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 3 )



படம்: நினைத்தாலே இனிக்கும்
இசை: விஜய் ஆந்தோனி
பாடியவர்கள்: பிரசன்னா, ஜானகி ஐயர்

அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொல்லாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
(அழகாய்..)

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கை சிறை காணும் நேரம்
காதலன் கை சிறை காணும் நேரம்
மீண்டும் ஒரே கருவரை கண்ட நாளை
கண்ணில் ஈரம்
(அழகாய்..)

கடவுளின் கனவில்
இருவரும் இருப்போமே ஓஹோ
கவிதையின் வடிவில்
வாழ்ந்திட நினைப்போமே ஓஹோஹோ

இருவரும் நடந்தால்
ஒரு நிழல் பார்ப்போமே ஓஹோஹோ
ஒரு நிழல் அதிலே
இருவரும் தெரிவோமே ஓஹோஹோ

சில நேரம் சிரிக்கிறேன்
சில நேரம் அழுகிறேன் உன்னாலே
(அழகாய்..)

ஒரு முறை நினைத்தேன்
உயிர் வரை இனித்தாயே ஓஹோ
மறுமுறை நினைத்தேன்
மனதினை வதைத்தாயே ஓஹோஹோ

சிறு துளி விழுந்து
நிறை குடம் ஆனாயே ஓஹோஹோ
அறை கணம் பிரிவில்
வரைவிட செய்தாயே ஓஹோஹோ

நீ இல்லா நொடி முதல்
உயிர் எல்லாம் ஜடத்தை போல் ஆவேனே
(அழகாய்..)

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 5 )

படம்: டிஷ்யூம்.
பாடியவர்கள்: காயத்ரி, ராகுல் நம்பியார்.
வரிகள்: வைரமுத்து.
இசை: விஜய் ஆண்டனி.

நான் சொல்வது எல்லாம் உண்மை
உண்மையைத் தவிர வேறு எதுவும் இல்லை

பூமிக்கு வெளிச்சம் எல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனி துளிகள் நீ முகம் கழுவுவதால்

கடலுக்கு நுரைகள் எல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்த மழை நீ என்னை தழுவியதால்

(பூமிக்கு)

நீ விழியால் விழியை பறிதாய்
உன் உயிரினை எனக்குள்ளே விதைதாய்
உன் அழகால் எனை நீ அடிததாய்
ஓர் அதிசய உலகத்தில் அடைத்தாய்

நீ இதமாய் இதயம் கடித்தாய்
என் இதழ் சொட்டும் அருவியில் குளித்தாய்
நீ மதுவாய் என்னையே குடித்தாய்
இந்த உலகத்தை உடைத்திட துடித்தாய்

காதல் வந்த பிறகு ஒட்டி கொள்ளும் சிறகு
வாழ ஒரு பூமி இனி தேவை இல்லை
ஒப்புக்கொண்ட உயிர்கள் கட்டிக்கொண்டு பறந்தால்
எட்டி நிற்கும் வானம் ஒன்றும் தூரம் இல்லை

பூமிக்கு வெளிச்சம் எல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனி துளிகள் நீ முகம் கழுவுவதால்

நீ மெதுவாய் நடந்தால் கடந்தால்
என் உணர்ச்சிகள் தீ பிடித்து எரியும்
நீ துளியாய் எனக்குள் விழுந்தால்
என் உயிர் பனிக்கட்டியாக உறையும்

நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தால்
என் உள்ளம் வந்து மண்டியிட்டு தவழும்
நீ நெருப்பாய் முறைத்தால் தவிர்த்தால்
என் நெஞ்சுக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும்

கண்களில் மின்மினி புன்னகை சிம்போனி
மின்னலின் தங்கை நீ புரிகிறதே
தொட்ட உடன் உருகும் ஒட்டி கொண்டு பழகும்
புத்தம் புது மிருகமே தெரிகிறதே

(பூமிக்கு)

கடலுக்கு நுரைகள் எல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்த மழை நீ என்னை தழுவியதால்

விரும்பிக்கேட்டவர் kanavugalkalam.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 2 )

அழகு மலராட



படம்: வைதேகி காத்திருந்தாள்
இசை: இளையராஜா
பாடியவர்: S. ஜானகி
வரிகள்: வைரமுத்து


அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்ப்லியும் புலம்புவது கேள்
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது
(அழகு..)

ஊதாத புல்லாங்குழல் ஒரு பொழுதும் சூடாத பூவின் மடல்
தேய்கின்ற மஞ்சல் நிலா ஒரு துணையைத் தேடாத வெள்ளைப் புறா
பூங்காற்றும் மெதுவாகப் பட்டாலும் போதும்
பொன்மேனி நெருப்பாகக் கொதிக்கின்றது
நீரூற்றுப் பாயாத நிலம்போல நாளும்
என் மேனி தரிசாக இருக்கின்றது
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை
இனிமை இல்லை வழ்வில் எதற்கு இந்த இளமை
பதிலேதும் இல்லாத கேள்வி
(அழகு..)

ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தள்ளாது
ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது
தாலாட்டில் சேராத தனிப்பாடல் ஒன்று
சங்கீதம் காணாமல் துடிக்கின்றது
விடியாத இரவென்றும் கிடையாது என்று
ஊர் சொன்ன வார்த்தைகள் பொய்யானது
வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெருமா
ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம்
வேரென்ன நான் செய்த பாவம்
(அழகு..)

விரும்பிக்கேட்டவர் UNGALODU NAAN .

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 3 )




படம் : சத்தம் போடாதே
இசை : யுவன்சங்கர் ராஜா
பாடியவர் : சங்கர் மஹாதேவன்
பாடலாசிரியர் : ந.முத்துக்குமார்

அழகு குட்டிச்செல்லம் உனை அள்ளித்தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்
ஆளை கடத்தி போகும் உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன் நான் திரும்பி போக மாட்டேன்
அம்மு நீ என் பொம்மு நீ மம்மு நீ என் மின்மினி
உனக்குத் தெரிந்த மொழியிலே எனக்கு பேசத்தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லை
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதர்க்கிந்த ஆராய்ச்சி
சிஞ்சனிஞ்ச சிஞ்சனிஞ்ச சிஞ்சனி
மஞ்சனிஞ்சி மஞ்சனிஞ்சி மஞ்சரி [அழகு...]

ரோஜாப்பூ கை ரெண்டும் காற்றோடு கதை பேசும்
உன் பின்னழகில் பௌர்ணமிகள் தகதிமிதா ஜதி பேசும்
எந்த நேரம் ஓயாத அழுகை ஏனிந்த முட்டிக்கால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால் வாசனை
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை
எந்த நாட்டை பிடித்துவிட்டான்
இப்படியோர் ரெட்டினக்கால் தோரனை... தோரனை
சிஞ்சனிஞ்ச சிஞ்சனிஞ்ச சிஞ்சனி
மஞ்சனிஞ்சி மஞ்சனிஞ்சி மஞ்சரி [அழகு...]

நீ தின்ற மண் சேர்த்தால் வீடொன்று கட்டிடலாம்
நீ சினுங்கும் மொழி கேட்டால் சங்கீதம் கற்றிடலாம்
தண்டவாளம் இல்லாத ரயிலை தவழ்ந்த படி நீ ஓட்டி போவாய்
வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்
கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்
ஒழிந்து ஒழிந்து போக்கு காட்டி
ஓடுகின்ற கண்ணனே புன்னகை மன்னனே
சிஞ்சனிஞ்ச சிஞ்சனிஞ்ச சிஞ்சனி
மஞ்சனிஞ்சி மஞ்சனிஞ்சி மஞ்சரி [அழகு...]

விரும்பிக்கேட்டவர் கார்க்கி.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 4 )



படம் : இந்திரா
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர் : ஹரிணி / ஹரிஹரன்
வரிகள் : வைரமுத்து


நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்

.......... நிலா காய்கிறது .........

அதோ போகின்றது ஆசை மேகம் மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்
இந்த வாழ்க்கையே சீதனம் உங்கள் தேவையைத் தேடுங்கள்

.......... நிலா காய்கிறது .........



நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்

.......... நிலா காய்கிறது .........

அதோ போகின்றது கானல் மேகம் மழையை காணவில்லையே
இதோ கேட்கின்றது குயிலின் சோகம் இசையும் கேட்கவில்லையே
இந்த பூமியே பூவனம் எந்தன் பூவிதழ் சருகுதே
இந்த வாழ்கையே சீதனம் அதில் ஜீவனே தேயுதே

.......... நிலா காய்கிறது .........

விரும்பிக்கேட்டவர் கார்த்திக்.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 2 )