ராகங்கள் பதினாறுபடம்: தில்லுமுல்லு
பாடியவர்: எஸ்.பி.பி.
வரிகள்:கண்ணதாசன்.
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்.

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு,
நான் பாடும் போது அறிவாய் அம்மா..
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன,
பதினாரு பாட சுகமானது..(2)
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு,
நான் பாடும் போது அறிவாய் அம்மா..

கலை மாது தான் மீட்டும்,இதமான வீணை,
கனிவான ஸ்வரம் பாட பதமானது(2)
அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட,
ஆதர ஸ்ருதி கொண்ட வீணை அம்மா..(2)

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு,
நான் பாடும் போது அரிவாய் அம்மா..

இடை ஆட,வளை ஆட,சலங்கைகள் ஆட,
இலையோடு கொடி பொல நடமாடினாள்(2)
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்,
ஆனந்தம் குடி கொண்ட கோலம் அம்மா..

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு,
நான் பாடும் போது அறிவாய் அம்மா..
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன,
பதினாரு பாட சுகமானது..(2)

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு,
நான் பாடும் போது அறிவாய் அம்மா..

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 5 )

நம்ம ஊரு சிங்காரிபடம்: நினைத்தாலே இனிக்கும்
பாடியவர்: எஸ்.பி.பி.
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
வரிகள்: கண்ணதாசன்.

நம்ம ஊரு சிங்காரி, சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூமுடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூமுடிச்சு நின்னாளாம்

மன்மதன் வந்தானாம், சங்கதி சொன்னானாம்
மன்மதன் வந்தானாம் நல்ல சங்கதி சொன்னானாம்

(நம்ம ஊரு..)

பாலாடை போலாடும் பாப்பா, எப்பொதும் நான் சொன்னா கேப்பா (2)
நான் ஊரு விட்டு ஊரு வந்து நாளை வச்சு தேதி வச்சு
நீயின்றி போவேனோ ஸம்போ
நான் மூணு மெத்தை மாடி கட்டி, மாடி மேல ஒன்ன வெச்சு
பாக்காமல் போவேனோ ஸம்போ

(மன்மதன்..)
(நம்ம ஊரு..)

அன்பான உன் பேச்சு ராகம், நடை போட்டு நீ வந்தா தாளம்
சுகமான உன் மேனி பாடல், இனிமேலும் இதிலென்ன ஊடல்
இந்த தேவனுக்கு நீயும் சொந்தம், தேவதைக்கு நானும் சொந்தம்
பூலோகம் தாங்காது வாம்மா
இந்த காதலுக்கு ஈடு சொல்ல காவியத்தில் யாருமில்லை
நீயொன்று நானொன்றுதாம்மா

(மன்மதன்..)
(நம்ம ஊரு..)

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 2 )

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்து உக்காங்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய் (3)


தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல் வந்து என்னைத் தீண்டியதே
என் நரம்போடு வீணை மீட்டியதே
மனம் அவந்தானா இவன் என்று திடுக்கிட்டதே

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல் வந்து உன்னைத் தீண்டியதோ
உன் நரம்போடு வீணை மீட்டியதோ
உன் உயிர்க்குள்ளே காதல் அம்பைத் தொடுத்திட்டதோ

விழியோடும் தீண்டல் உண்டு விரலோடும் தீண்டல் உண்டு
இரண்டோடும் பேதம் உள்ளது

விழித்தீண்டல் உயிர் கிள்ளும் விரல் தீண்டல் உள்ளம் கிள்ளும்
அதுதானே நீ சொல்வது

நதியோரப் பூவின்மேலே ஜதிபாடும் சாரல் போலே
என்னில் இன்பதுன்பம் செய்குவதோ

ஒரு கன்னம் தந்தேன் முன்னே மறு கன்னம் தந்தாய் பெண்ணே
ஏசுநாதர் காற்று வந்து வீசியதோ

உறவின் உயிரே உயிரே என்னைப் பெண்ணாய் செய்க

அழகே அழகே உன் ஆசை வெல்க

(தீண்டாய்)

கடலோடு முத்தம் தந்தும் கலையாத வானம் போல
உடலோடு ஒட்டிக்கொள்ளவோ

உடலோடு அங்கும் இங்கும் உறைகின்ற ஜீவன் போல
உன்னோடு கட்டிக்கொள்ளவோ

உனைத் தேடி மண்ணில் வந்தேன் எனைத்தேடி நீயும் வந்தாய்
உன்னை நானும் என்னை நீயும் கண்டுகொண்டோம்

பல பேர்கள் காதல் செய்து பழங்காதல் தீரும்போது
பூமி வாழப் புதிய காதல் கொண்டுவந்தோம்

பனியோ பனியின் துளியோ உன் இதழ்மேல் என்ன

பனியோ தேனோ நீ சுவைத்தால் என்ன

(தீண்டாய்)

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய் (2)
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
படி தாண்டாய்...படி தாண்டாய்...
படி தாண்டாய்...படி தாண்டாய்...

-அன்புடன்,
ஸ்ரீமதி.Read Users' Comments ( 12 )

அஞ்சலி அஞ்சலி அஞ்சலிஅஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி

அம்மம்மா பிள்ளைக்கனி
அங்கம்தான் தங்கக்கனி
அம்மம்மா பிள்ளைக்கனி
அங்கம்தான் தங்கக்கனி
பொன்மணி சின்ன சின்ன
கண்மணி மின்ன மின்ன

கொஞ்சிட கொஞ்சிட வரும் கண்ணே நீ
புன்னகை சிந்திட வரும் பொன்னே நீ
முத்தமும் தந்திடும் சிறு பூவே நீ
கண்படும் கண்படும் இந்த பொன்மேனி

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி

ஆகாயம் பூமி எல்லாம் இறைவன் உண்டாக்கி வைத்து
ஆசை தான் தீராமலே உன்னை தந்தானம்மா
கண்ணே உன் மேல் மேகம் தான் பன்னீர் தூவி நீராட்டும்
துள்ளி தாவும் மான் குட்டி சொல்லி சொல்லி தாலாட்டும்
நடக்கும் நடையில் ஒரு பல்லாக்கு பல்லாக்கு
சிரிக்கும் சிரிப்பு புது மத்தாப்பு மத்தாப்பு
உனது அழகுக்கென்ன ராஜாத்தி ராஜாத்தி
உலகம் நடந்து வரும் கை தட்டி
வராமல் வந்த தேவதை உலாவும் இந்த வெள்ளி தாரகை

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி

பூ போன்ற கண்ணாலே தான் பேசும் சிங்காரமே நீ
அன்னம் போல் நம்மோடு தான் ஆடு எப்போதும் நீ
வானம் வாழும் ஏஞ்சல் தான் வண்ண பாப்பா அஞ்சலி தான்
அம்மா நெஞ்சில் ஊஞ்சல் தான் ஆடி பார்க்கும் அஞ்சலி தான்
நடந்து நடந்து வரும் பூச்செண்டு பூச்செண்டு
பறந்து பறந்து வரும் பொன்வண்டு பொன்வண்டு
எடுக்க எடுக்க இரு கை கொண்டு கை கொண்டு
இனிக்க இனிக்க வரும் கற்கண்டு
நிலாவை போல ஆடி வா நில்லாமல் கூட நீயும் ஓடி வா

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 3 )