படம்: இருவர்.
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ.
வரிகள்: வைரமுத்து.
இசை: A.R.ரஹ்மான்.

நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித்தரல நீர்வடிய
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா (2)

திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே வேல்விழி மொழிகள் கேளாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில் ஒற்றைப்பார்வை பார்த்தவனும் நீயா(2)

மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன
பாண்டினாடனைக் கண்டு என்மனம் பசலை கொண்டதென்ன
நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும் (2)
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
இடையினில் மேகலை இருக்கவில்லை

நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில் ஒற்றைப்பார்வை பார்த்தவனும் நீயா
அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித்தரல நீர்வடிய
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா (2)

யாயும் யாயும் யாராகியறோ என்று நேர்ந்ததென்ன
யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன (2)
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன

திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில் ஒற்றைப்பார்வை பார்த்தவனும் நீயா
அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித்தரல நீர்வடிய
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா (2)

விரும்பிக்கேட்டவர் சுரேஷ்குமார்.

-அன்புடன்,
ஸ்ரீமதி.

4 பேர் உடன் ரசித்தவர்கள்:

sathishsangkavi.blogspot.com said...

அற்புதமான பாடல்...

Sureshkumar said...

Nice Lines.

Thanks for this post

Sureshkumar said...

Please post kalyana maalai song

தமிழன்-கறுப்பி... said...

நிலாவிலே பார்த்த வண்ணம், கனாவிலே தோன்றும் இன்னும்.

:)

சமீபத்தில் மற்றொரு முறையாக இருவர் படம் பாத்தேன்.இன்று கூட இந்தப்பாட்டை கேட்டிருந்தேன்!!