படம் : கோடீஸ்வரன்
பாடியவர் : ஹரிஹரன்
வரிகள்: வைரமுத்து
இசை : ஆ.கோ.ஷ்

தொலைவினிலே வானம் தரை மேல் நானும்
தொடும் ஆசைகள் சிறகினை விரிக்குதே...............
மணி மணியாய்த் தூறல் மழை நாள் சாரல்
பட்டுப் பூச்சிகள் பார்வையில் பறக்குதே................
நீ நடந்து... போ!! கூட... என் நிழல் வரும் !!

(தொலைவினிலே)

பொன்வண்டு வாசல் வந்து பாடும்பொழுது
தாழ் போட்டு வைத்திருக்கும் பூக்கள் ஏது
நதியலை மெதுவாக வருடும் வேளையில்
உனைப்போல் நாணல் ஓடுமா ஒதுங்குமா

(தொலைவினிலே)

நீயின்றி நானிருந்தால் நிலவும் இருட்டு
என்னோடு நீயிருந்தால் இருட்டும் நிலவு
ஒரு துணை விரும்பாது உலகில் வாழ்வதா
அடடா பாவம் வாலிபம் வாடிடும்

(தொலைவினிலே)

விரும்பிக்கேட்டவர் கார்க்கி.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


4 பேர் உடன் ரசித்தவர்கள்:

கார்க்கிபவா said...

இந்த படம் வெளிவரவே இல்லை. எல்லாப் பாடல்களும் நன்றாக இருக்கும்..

தேடி பிடித்து பதிவிட்டதற்கு நன்றி...

வனம் said...

வணக்கம்

இதே படத்தில் இதே பாடல் சோகமாகவும் வரும்.

இரண்டு வரிதான் இருக்கும்

என் விருப்ப பாடல் அது.

இராஜராஜன்

Karthik said...

//Karthik said...

நல்ல பாட்டு.

நான் அதிகம் கேட்டதில்லை.

நன்றி.

(wow, it rhymes!!) :)//

ரிப்பீட்டேய்ய்ய்ய்! :))

priyan said...

My favourite one 👍