படம்: மௌனம் பேசியதே..
பாடியவர்: ஹரிஹரன்.
வரிகள்: வைரமுத்து.
இசை: யுவன் ஷங்கர் ராஜா.

நா ந ந ந ந ந ந நா நா .. ந ந நா
ந ந ந நா நா ந நந ந நா..
நா ந ந ந ந ந ந நா நா ... ந ந நா
ந ந ந நா..

சின்ன சின்னதாய் பெண்ணே..
என் நெஞ்சை முட்களால் தைத்தாய்
உன்விழியின் வால் கொண்டு வீசி..
இள மனதில் காயங்கள் தந்தாய்..
துன்பம் மட்டும் உன் உறவா...
உனை காதல் செய்வதே தவறா

உயிரே.... உயிரே....

காதல் செய்தால் பாவம்...
பெண்மை எல்லாம் மாயம்..
உண்மை கண்டேன்
உன்னால் பெண்ணே...

பெண்கள் கண்ணில் சிக்கும்...
ஆண்கள் எல்லாம் பாவம்...
உண்மை கண்டேன்
உன்னால் பெண்ணே....

ந ந.........

காதல் வெறும் மேகம் என்றேன்..
அடை மழையாய் வந்தாய்...
மழையோடு நனைந்திட வந்தேன்..
நீ தீயை மூடினாய்....
மொழியாக இருந்தேனே...
உன்னால் இசையாக மலர்ந்தேனே...

உயிரோடு கலந்தவள் நீதான் ..
ஹெய் பெண்ணே..
கனவாகி கலைந்ததும் ஏனோ..
சொல் கண்ணே..

மௌனம் பேசிதே...
உனக்கது தெரியலயா..
காதல் வார்த்தைகளை..
கண்கள் அறியலையா...

நா ந ந ...........
தொம் தொம் தொம் .........

துணை இன்றி தனியாய் சென்றேன்..
என் நிழலாய் வந்தாய்..
விடைத் தேடும் மாணவன் ஆனென்..
என் விடையும் நீயென...வந்தாயே..
என் வழியில்..கடல் தந்தாயே...
உன் மொழியில்...

என் நெஞ்சில் காதல் வந்து..
நான் சொன்னென்..
உன் காதல் வெறோர் மனதில்..
எனை நொந்தேன்...

கண்கள் உள்ளவரை...
காதல் அழிவதில்லை...
பெண்கள் உள்ளவரை...
ஆண்கள் ஜெயிப்பதில்லை...

நா ந ந ந ந........

காதல் செய்தால் பாவம்...
பெண்மை எல்லாம் மாயம்..

விரும்பிக்கேட்டவர் வழிப்போக்கன்.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


7 பேர் உடன் ரசித்தவர்கள்:

வழிப்போக்கன் said...

ரொம்ப நன்றி அக்கா....

வழிப்போக்கன் said...

ரொம்ப நன்றி அக்கா....
செம ஃபாஸ்ட் நீங்க...

கார்க்கிபவா said...

சூப்பர்.. த்ரிஷா இவ்ளோ அழகா?

ஹிஹிஹி.. பாட்டும் சூப்பர்தான்.. இதே பாட்டை எஸ்.பி.பி பாடின வெர்ஷனும் உண்டு.. ஆனா அது ராகமே கொஞ்சம் வேற மாதிரி இருக்கும்..

Unknown said...

Super

Karthik said...

ரொம்ப நன்றி அக்கா. நல்ல பாட்டு. :)))

க. தங்கமணி பிரபு said...

இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

http://www.srilankacampaign.org/form.htm



அல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htm



என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
அப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்!! நன்றி!!

Anonymous said...

ஆஆஆஆஆ....ஐ லைக் சூர்யா..நல்ல பாடல்..நன்றிங்க..


அன்புடன்,

அம்மு.