படம்: மோதி விளையாடு.
பாடியவர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ, சுனிதா சாரதி.
இசை : ஹரிஹரன்-லெஸ்லி.

பாதி காதல் பாதி முத்தம்
போதாது போதாது போடா
ஓ மீதி முத்தம் கேட்டு கேட்டு
மேலாடை தீமூட்டும் வாடா
என் பெண்மை எரியுதடா

பாதி காதல் பாதி முத்தம்
போதாது போதாது போடா
ஓ மீதி முத்தம் கேட்டு கேட்டு
மேலாடை தீமூட்டும் வாடா
என் பெண்மை எரியுதடா
உதட்டில் எனை மூட்டி
உயிர் உருக செய்த மன்மதா
உச்சம் வரும் பொழுது
உனை உதறி கொள்வதா?

மோசமான கனவு ஒன்று
மீண்டும் மீண்டும் மீண்டும் தோன்றும்
ஹோ நான் ஆணின் தேகம் ஆள்வதாக
வெட்க கனவு வெள்ளை கோடு தாண்டும்
என் வயது வலிக்குதடா

பறக்கும் முத்தம் கொடுத்து
எனை பறக்க சொல்லும் மன்மதா
விருந்தே உன்னை அழைக்க
பசி விலகி செல்வதா

காதல் என்னை காதல் செய்ய
பாதுகாப்பு வளையம் தளர்த்தினேன்
பூனை போல உள்ளே வந்தாய்
பானை இருக்கும் திசையை காட்டினேன்
பயந்து கொண்டே இதழ் குடித்தாய்
பாதியிலே விட்டு பாய் மேல் சென்றாய்

மோசமான கனவு ஒன்று
மீண்டும் மீண்டும் மீண்டும் தோன்றும்
ஹோ தோன்றும் ஹோ தோன்றும்

ரோஜா பூவின் வாசம் எல்லாம்
எந்தன் இதழில் அதிகம் உள்ளதோ
ஹோ பெண்மை காணும் இன்பம் எல்லாம்
எந்தன் உடலில் எங்கு உள்ளதோ
வாச்த்சாயணம் படித்தவனே
வாரி கொடுத்தால் சுவர்க்கம் காண்பேன் நானே

பாதி காதல் பாதி முத்தம்
போதாது போதாது போடா
ஓ மீதி முத்தம் கேட்டு கேட்டு
மேலாடை தீமூட்டும் வாடா
என் பெண்மை எரியுதடா
உதட்டில் எனை மூட்டி
உயிர் உருக செய்த மன்மதா
உச்சம் வரும் பொழுது
உனை உதறி கொள்வதா?

-அன்புடன்,
ஸ்ரீமதி.


6 பேர் உடன் ரசித்தவர்கள்:

Karthik said...

dont like this song that much cool lyrics though. ;))

☀நான் ஆதவன்☀ said...

ஆகா பாட்டு கேட்டதை விட படிக்க நல்லா தான் இருக்கு :)

Prabhu said...

wow!இவ்வளவு அழகான, எரோடிக் வரிகளா? வைரமுத்து! சான்ஸே இல்ல!

வழிப்போக்கன் said...

nice song....

ஆளவந்தான் said...

விரும்பி கேட்டது யாருங்கோ?? :)

MSK / Saravana said...

செம பாட்டு இல்ல, ஸ்ரீ..
முதல் தடவை பாடலை பார்த்த போதே பிடித்து விட்டது.. காஜல் செம அழகு.. :)))