என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட..


படம்: உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்.
பாடியவர்: எஸ்.பி.பி., ஸ்வர்ணலதா.
இசை: இளையராஜா.

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
அன்பே ஓடி வா...அன்பால் கூடவா ...
ஓ...பைங்கிளி ...நிதமும்

(என்னைத் தொட்டு )

சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம்
சொர்க்கம் சொர்க்கம் என்னை சீராட்ட வரணும்
பொன்னி பொன்னி நதி நீராட வரணும்
என்னை என்னை நிதம் நீ ஆள வரணும்
பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை
அள்ளித் தர தானாக வந்து விடு ...
என்னுயிரை தீயாக்கும் மன்மத பானத்தை
கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு ...
அன்பே ஓடி வா ...
அன்பால் கூடவா ...
அன்பே ஓடி வா ...அன்பால் கூடவா .(2)..
ஓ...பைங்கிளி...நிதமும்

என்னைத் தொட்டு ...
நெஞ்சைத் தொட்டு ...

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி..

ஆ ஆ ஆ அ ....ஆ ஆ ஆ ஆ ஆ அ ...ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே ...
ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே ...
மின்னல் மின்னல் கோடி போலாடும் அழகே ...
கண்ணால் கண்ணால் மொழி நீ பாடு குயிலே ...
கட்டுக்குள்ளே நிற்காது திரிந்த காளையை
கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே ...
அக்கரையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை
கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே ...
என்னில் நீயடி ...
உன்னில் நானடி ...
என்னில் நீயடி . ..உன்னில் நானடி ...
ஓ பைங்கிளி... நிதமும்

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி ..
அன்பே ஓடி வா ...அன்பால் கூட வா ...
ஓ ...பைங்கிளி ...நிதமும்
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி...

விரும்பிக்கேட்டவர் கார்க்கி.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


9 பேர் உடன் ரசித்தவர்கள்:

கார்க்கி said...

நன்றி நன்றி நன்றி

vanathy said...

// கண்ணால் கண்ணால் மொழி நீ பாடு குயிலே

கண்ணாலா ? கன்னலா ?

வித்யா said...

ஸ்ரீ
சாமிகிட்ட சொல்லிவெச்சு சேர்ந்த ன்னு வினித் பட பாட்டு ஒன்னு இருக்கு. அதைப் போட முடியுமா?

குட்டிபிசாசு said...

எங்க அண்ணிவுக்கு பிடித்த பாடல் இது.

Karthik said...

எங்க மாமாவுக்கு (கார்க்கி மாமா இல்ல. இவரு வேற :P) பிடிச்ச பாட்டு. :))

தமிழ்ப்பறவை said...

எனக்கும் மிக மிகப் பிடித்த பாடல்.. நன்றி...
ஹீரோயின் மோனிஷா... :-(

henry J said...

Unga blog romba nalla iruku
(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)

Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof

Download Youtube Videos free Click here

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

Narasimman said...

i need your blog template. could you please send the template to me?

my email ID is narasimm.an@yahoo.com

நினைவுகளுடன் -நிகே- said...

எனக்கும் மிகப் பிடித்த பாடல்.. நன்றி..