பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டு குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை

சின்னஞ்சிரு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட
சின்னச் சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு - அட
பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு

பச்சைக் கிளிகள்...

அந்த விண்ணில் ஆனந்தம்
இந்த மண்ணில் ஆனந்தம்
அடி பூமி பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம்
வெயிலின் வெப்பம் ஆனந்தம்
மழையின் சத்தம் ஆனந்தம் -அட
மழையில் கூட சாயம்-போகா வானவில் ஆனந்தம்
வாழ்வில் நூறானந்தம்
வாழ்வே பேரானந்தம் - பெண்ணே
நரை எழுதும் சுய சரிதம்
அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்

பச்சை கிளிகள்...

உன் மூச்சில் நான் வாழ்தால்
என் முதுமை ஆனந்தம் - நீ
இன்னொரு பிறவியில் என்னை பெற்றால் இன்னும் ஆனந்தம்
பனி கொட்டும் மாதத்தில்
உன் வெப்பம் ஆனந்தம் - என்
காது வரைக்கும் கம்பளி போர்த்தும்
கருணை ஆனந்தம்
சொந்தம் ஓரானந்தம்
பந்தம் பேரானந்தம் - கண்ணே
உன் விழியல் பிறர்க்கழுதால்
கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்

பச்சை கிளிகள்...

விரும்பிக்கேட்டவர் கார்ததிக் ராஜா.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


5 பேர் உடன் ரசித்தவர்கள்:

logu.. said...

hayyooo.....

Sema songgguuuu...
wonderful.

logu.. said...

intha songa ketal anantham..
parthal anantham..

athum unga blogla parthal peranantham.

logu.. said...

hellow shri..

M.Kumaran.. neeye.. neeye song irukka?

apram..Poonkatrile from uyire irukka?

Learn said...

கலக்குறிங்க

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

அம்பாளடியாள் said...

வாழ்த்துக்கள் தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளனர் .மேலும் சிறப்பான ஆக்கங்கள் தொடரட்டும் !