படம் : ஆனந்த தாண்டவம்
இசை : GV பிரகாஷ்
வரிகள் : வைரமுத்து
பாடியவர்கள் : நித்யஸ்ரீ, வினித்ரா, சுபா

கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

மண்ணை தொட்டாடும் சேலை சேலை கொண்டு
மார்பை தொட்டாடும் தாலி தாலி கொண்டு
மடியை தொட்டாடும் மாலை மாலை கொண்டு மகிழ்வேன்
தினம் தினமும்
வாசம் கொண்டாடும் பூக்கள் பூக்கள் வைத்து
வாசல் கொள்ளாத கோலம் கோலமிட்டு
காதல் கொண்டாடும் கணவன் திருவடியில் மலர்வேன்

கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

என் தோழிகளும் உன் தோழர்களும் அய்யோ நம்மை கேலி செய்ய
என் சேலையும் உன் வேட்டியும் நாணும்
நீ கிள்ளிவிட நான் துள்ளியெழ ஆகா அது இன்ப துன்பம்
நான் கிள்ளிவிட என் கைவிரல்கள் ஏங்கும்
தஞ்சாவூர் மேளம் கொட்ட தமிழ்நாடே வாழ்த்து சொல்ல
சிவகாசி வேட்டுச்சத்தம் ஊரை கிழிக்கும்
தென்னாட்டு நெய்யின் வாசம் செட்டிநாட்டு சமையல் வாசம்
நியூயார்க்கை தாண்டி கூட மூக்கை துளைக்கும்

கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

நம் பள்ளியறை நம் செல்ல அறை அன்பே அதில் பூக்கள் உண்டு
பூவாடையின்றி வேறாடைகள் இல்லை
ஆண் எனபதும் பெண் என்பதும் ஹையோ இனி அர்த்தமாகும்
நீ என்பதும் நான் என்பதும் இல்லை

மார்போடு பின்னிக்கொண்டு மணிமுத்தம் எண்ணிக்கொண்டு
மடியோடு வீடுகட்டி காதல் செய்வாயே
உடல்கொண்ட ஆசையல்ல உயிர்கொண்ட ஆசை எந்தன்
உயிர்போகும் முன்னால் வாழ்வை வெற்றி கொள்ளுமே

கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

மண்ணை தொட்டாடும் சேலை சேலை கொண்டு
மார்பை தொட்டாடும் தாலி தாலி கொண்டு
மடியை தொட்டாடும் மாலை மாலை கொண்டு மகிழ்வேன்
தினம் தினமும்
வாசம் கொண்டாடும் பூக்கள் பூக்கள் வைத்து
வாசல் கொள்ளாத கோலம் கோலமிட்டு
காதல் கொண்டாடும் கணவன் திருவடியில் மலர்வேன்

-அன்புடன்,
ஸ்ரீமதி.


5 பேர் உடன் ரசித்தவர்கள்:

கார்க்கிபவா said...

இதுவும் நல்லப் பாட்டுதான். ஆனா என் ஃபேவரிட் கல்லில் ஆடும் பூவே

Anonymous said...

மாயாவில 'சந்திரனே சந்திர சுந்தரனே' பாட்டு போடுங்க

Cinema Virumbi said...

நான் படம் பார்க்கவில்லை. இந்தப் பாடலை மட்டும் TV இல் பார்த்தேன். சுஜாதாவின் அருமையான 'பிரிவோம் சந்திப்போம்' ஐ சினிமாவில் சொதப்பி விட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் இந்தப் பாடல் ஒரு Visual Treat! பொய்க்கால் குதிரை போல் யானை, மாடு, ஆடு முகமூடிகளை இடுப்பில் அணிந்து கொண்டு குரூப் டான்சர்கள் ஆடுவது கண் கொள்ளாக் காட்சி! பாடலின் ட்யூன் சுகம்;வரிகளும் அருமை; எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்!

நன்றி!

சினிமா விரும்பி

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

:))))))

Karthik said...

no post modern poems for a while? :(

anyway superb song, and she has brilliant screen presence! hope she will do few more movies..:)

i see a pattern in the songs that are getting featured here..lol..:))