கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்து உக்காங்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய் (3)


தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல் வந்து என்னைத் தீண்டியதே
என் நரம்போடு வீணை மீட்டியதே
மனம் அவந்தானா இவன் என்று திடுக்கிட்டதே

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல் வந்து உன்னைத் தீண்டியதோ
உன் நரம்போடு வீணை மீட்டியதோ
உன் உயிர்க்குள்ளே காதல் அம்பைத் தொடுத்திட்டதோ

விழியோடும் தீண்டல் உண்டு விரலோடும் தீண்டல் உண்டு
இரண்டோடும் பேதம் உள்ளது

விழித்தீண்டல் உயிர் கிள்ளும் விரல் தீண்டல் உள்ளம் கிள்ளும்
அதுதானே நீ சொல்வது

நதியோரப் பூவின்மேலே ஜதிபாடும் சாரல் போலே
என்னில் இன்பதுன்பம் செய்குவதோ

ஒரு கன்னம் தந்தேன் முன்னே மறு கன்னம் தந்தாய் பெண்ணே
ஏசுநாதர் காற்று வந்து வீசியதோ

உறவின் உயிரே உயிரே என்னைப் பெண்ணாய் செய்க

அழகே அழகே உன் ஆசை வெல்க

(தீண்டாய்)

கடலோடு முத்தம் தந்தும் கலையாத வானம் போல
உடலோடு ஒட்டிக்கொள்ளவோ

உடலோடு அங்கும் இங்கும் உறைகின்ற ஜீவன் போல
உன்னோடு கட்டிக்கொள்ளவோ

உனைத் தேடி மண்ணில் வந்தேன் எனைத்தேடி நீயும் வந்தாய்
உன்னை நானும் என்னை நீயும் கண்டுகொண்டோம்

பல பேர்கள் காதல் செய்து பழங்காதல் தீரும்போது
பூமி வாழப் புதிய காதல் கொண்டுவந்தோம்

பனியோ பனியின் துளியோ உன் இதழ்மேல் என்ன

பனியோ தேனோ நீ சுவைத்தால் என்ன

(தீண்டாய்)

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய் (2)
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
படி தாண்டாய்...படி தாண்டாய்...
படி தாண்டாய்...படி தாண்டாய்...

-அன்புடன்,
ஸ்ரீமதி.



12 பேர் உடன் ரசித்தவர்கள்:

க.பாலாசி said...

நல்ல பாடல்.....பகிர்வுக்கு நன்றி..

முனைவர் இரா.குணசீலன் said...

எனக்கு மிகவும் பிடித்த பாடல்..
இதில் முதலில் இடம்பெறும் குறுந்தொகைப்பாடலின் பொருளை...

http://gunathamizh.blogspot.com/2009/10/blog-post_8847.html

இங்கு காணலாம்.

முனைவர் இரா.குணசீலன் said...

எனக்கு மிகவும் பிடித்த பாடல்..
இதில் முதலில் இடம்பெறும் குறுந்தொகைப்பாடலின் பொருளை...

http://gunathamizh.blogspot.com/2009/10/blog-post_8847.html

இங்கு காணலாம்.

கார்க்கிபவா said...

எங்க இருந்துங்க பாட்டெல்லாம் எடுக்கறீங்க? செம பாட்டு..

அமிர்தவர்ஷினி அம்மா said...

hee, super song srimaa!

sathishsangkavi.blogspot.com said...

எப்படிங்க உங்களாள மட்டும் இப்படி
அழகான பாடல் எல்லாம் எழுத முடியுது.....

Vidhya Chandrasekaran said...

எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு இஷாவையும் அரவிந்தையும் தவிர்த்து:)

Anonymous said...

இதே படத்துல 'திறக்காத காற்றுக்குள்ளே' பாட்டும் சூப்பரா இருக்கும்

அண்ணாமலையான் said...

அடப்பாவமே... சரி நான் மட்டுமாவது இஷாவுக்கு சப்போர்ட் பன்றேன்.(பாட்டத்தான் இத்தன நல்ல உள்ளங்கள் பாராட்டுதே)

Sakthi said...

அருமை போங்க

இளைய கவி said...

சூப்பரு பாட்டு சூப்பரு

CS. Mohan Kumar said...

ஸ்ரீ,

2009 வருட சிறந்த பாடல்கள், பாடியவர், இசை அமைப்பாளர் எல்லாம் தொகுத்து என் blog-ல் எழுத் போறேன். உங்களுக்கு பாடல்களில் நிறைய ஆர்வம் உண்டு என்பதால் உங்க inputs-ம் வாங்க எண்ணுகிறேன் உங்க மெயில் முகவரி வேண்டும். எனக்கு snehamohankumar@yahoo.co.in க்கு தெரிவியுங்கள் ப்ளீஸ்

மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com