நம்ம ஊரு சிங்காரிபடம்: நினைத்தாலே இனிக்கும்
பாடியவர்: எஸ்.பி.பி.
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
வரிகள்: கண்ணதாசன்.

நம்ம ஊரு சிங்காரி, சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூமுடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூமுடிச்சு நின்னாளாம்

மன்மதன் வந்தானாம், சங்கதி சொன்னானாம்
மன்மதன் வந்தானாம் நல்ல சங்கதி சொன்னானாம்

(நம்ம ஊரு..)

பாலாடை போலாடும் பாப்பா, எப்பொதும் நான் சொன்னா கேப்பா (2)
நான் ஊரு விட்டு ஊரு வந்து நாளை வச்சு தேதி வச்சு
நீயின்றி போவேனோ ஸம்போ
நான் மூணு மெத்தை மாடி கட்டி, மாடி மேல ஒன்ன வெச்சு
பாக்காமல் போவேனோ ஸம்போ

(மன்மதன்..)
(நம்ம ஊரு..)

அன்பான உன் பேச்சு ராகம், நடை போட்டு நீ வந்தா தாளம்
சுகமான உன் மேனி பாடல், இனிமேலும் இதிலென்ன ஊடல்
இந்த தேவனுக்கு நீயும் சொந்தம், தேவதைக்கு நானும் சொந்தம்
பூலோகம் தாங்காது வாம்மா
இந்த காதலுக்கு ஈடு சொல்ல காவியத்தில் யாருமில்லை
நீயொன்று நானொன்றுதாம்மா

(மன்மதன்..)
(நம்ம ஊரு..)

-அன்புடன்,
ஸ்ரீமதி.


2 பேர் உடன் ரசித்தவர்கள்:

கார்க்கி said...

யாரு விரும்பி கேட்டாங்க?

ஷோபிகண்ணு said...

எனக்கு முதல் 2 லைன் மட்டும்தான் பாட முடிஞ்சுது. மத்ததெல்லாம் சும்ம படிக்கதான் முடியுது.
:-) :-)