ராகங்கள் பதினாறுபடம்: தில்லுமுல்லு
பாடியவர்: எஸ்.பி.பி.
வரிகள்:கண்ணதாசன்.
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்.

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு,
நான் பாடும் போது அறிவாய் அம்மா..
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன,
பதினாரு பாட சுகமானது..(2)
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு,
நான் பாடும் போது அறிவாய் அம்மா..

கலை மாது தான் மீட்டும்,இதமான வீணை,
கனிவான ஸ்வரம் பாட பதமானது(2)
அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட,
ஆதர ஸ்ருதி கொண்ட வீணை அம்மா..(2)

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு,
நான் பாடும் போது அரிவாய் அம்மா..

இடை ஆட,வளை ஆட,சலங்கைகள் ஆட,
இலையோடு கொடி பொல நடமாடினாள்(2)
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்,
ஆனந்தம் குடி கொண்ட கோலம் அம்மா..

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு,
நான் பாடும் போது அறிவாய் அம்மா..
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன,
பதினாரு பாட சுகமானது..(2)

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு,
நான் பாடும் போது அறிவாய் அம்மா..

-அன்புடன்,
ஸ்ரீமதி.


5 பேர் உடன் ரசித்தவர்கள்:

அண்ணாமலையான் said...

அர்த்தமுள்ள வரிகள் ....

Saravana Kumar MSK said...

//பதினாரு//

பதினாறு.. :)

Saravana Kumar MSK said...

ThilluMullu is one of my favorite movie..

கார்க்கி said...

//இடை ஆட,வளை ஆட,சலங்கைகள் ஆட,
இலையோடு கொடி பொல நடமாடினா//

அட அட அட

வெற்றி said...

இந்த பாடல் எப்போதும் எனது பேவரிட் ப்ளேலிஸ்ட்டில் இருக்கும்.வரிகளை பகிர்ந்தமைக்கு நன்றி!