படம் : சத்தம் போடாதே
இசை : யுவன்சங்கர் ராஜா
பாடியவர் : சங்கர் மஹாதேவன்
பாடலாசிரியர் : ந.முத்துக்குமார்

அழகு குட்டிச்செல்லம் உனை அள்ளித்தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்
ஆளை கடத்தி போகும் உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன் நான் திரும்பி போக மாட்டேன்
அம்மு நீ என் பொம்மு நீ மம்மு நீ என் மின்மினி
உனக்குத் தெரிந்த மொழியிலே எனக்கு பேசத்தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லை
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதர்க்கிந்த ஆராய்ச்சி
சிஞ்சனிஞ்ச சிஞ்சனிஞ்ச சிஞ்சனி
மஞ்சனிஞ்சி மஞ்சனிஞ்சி மஞ்சரி [அழகு...]

ரோஜாப்பூ கை ரெண்டும் காற்றோடு கதை பேசும்
உன் பின்னழகில் பௌர்ணமிகள் தகதிமிதா ஜதி பேசும்
எந்த நேரம் ஓயாத அழுகை ஏனிந்த முட்டிக்கால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால் வாசனை
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை
எந்த நாட்டை பிடித்துவிட்டான்
இப்படியோர் ரெட்டினக்கால் தோரனை... தோரனை
சிஞ்சனிஞ்ச சிஞ்சனிஞ்ச சிஞ்சனி
மஞ்சனிஞ்சி மஞ்சனிஞ்சி மஞ்சரி [அழகு...]

நீ தின்ற மண் சேர்த்தால் வீடொன்று கட்டிடலாம்
நீ சினுங்கும் மொழி கேட்டால் சங்கீதம் கற்றிடலாம்
தண்டவாளம் இல்லாத ரயிலை தவழ்ந்த படி நீ ஓட்டி போவாய்
வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்
கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்
ஒழிந்து ஒழிந்து போக்கு காட்டி
ஓடுகின்ற கண்ணனே புன்னகை மன்னனே
சிஞ்சனிஞ்ச சிஞ்சனிஞ்ச சிஞ்சனி
மஞ்சனிஞ்சி மஞ்சனிஞ்சி மஞ்சரி [அழகு...]

விரும்பிக்கேட்டவர் கார்க்கி.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


4 பேர் உடன் ரசித்தவர்கள்:

Vidhya Chandrasekaran said...

ஜூனியரின் பேவரிட் சாங்காக கொஞ்ச நாள் இருந்தது:)

கார்க்கிபவா said...

//எப்போதும் இவன் மீது பால் வாசனை
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை
எந்த நாட்டை பிடித்துவிட்டான்
இப்படியோர் ரெட்டினக்கால் தோரனை... தோரனை
//

க்யூட் சாங்.. படமெடுக்கிறேன்னு மனுஷன் கடுப்படிப்பான். மொக்கை டைரக்டர்.. அதே மாதிரி இந்தப் பாட்ட ஷங்கர விட சாஃப்ட்டா யாரையாவது பாட வச்சிருக்கலாம். பிருத்வு ஓரளவுக்கு குழந்தையை ரசிச்சபடி நடிச்சதும், முத்துக்குமாரின் வரிகளும்தான் இந்த பாட்டுக்கு பலம்..

நன்றி மேட்டா,

Karthik said...

அட்டகாசம்..:)

CS. Mohan Kumar said...

அட அட அட ரொம்ப பிடிச்ச பாட்டு. எனக்கு பொதுவாக மிக பிடித்தது குழந்தைகள். ரொம்ப நன்றி

Picturizationம் அருமை

மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com