படம்: நினைத்தாலே இனிக்கும்
இசை: விஜய் ஆந்தோனி
பாடியவர்கள்: பிரசன்னா, ஜானகி ஐயர்

அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொல்லாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
(அழகாய்..)

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கை சிறை காணும் நேரம்
காதலன் கை சிறை காணும் நேரம்
மீண்டும் ஒரே கருவரை கண்ட நாளை
கண்ணில் ஈரம்
(அழகாய்..)

கடவுளின் கனவில்
இருவரும் இருப்போமே ஓஹோ
கவிதையின் வடிவில்
வாழ்ந்திட நினைப்போமே ஓஹோஹோ

இருவரும் நடந்தால்
ஒரு நிழல் பார்ப்போமே ஓஹோஹோ
ஒரு நிழல் அதிலே
இருவரும் தெரிவோமே ஓஹோஹோ

சில நேரம் சிரிக்கிறேன்
சில நேரம் அழுகிறேன் உன்னாலே
(அழகாய்..)

ஒரு முறை நினைத்தேன்
உயிர் வரை இனித்தாயே ஓஹோ
மறுமுறை நினைத்தேன்
மனதினை வதைத்தாயே ஓஹோஹோ

சிறு துளி விழுந்து
நிறை குடம் ஆனாயே ஓஹோஹோ
அறை கணம் பிரிவில்
வரைவிட செய்தாயே ஓஹோஹோ

நீ இல்லா நொடி முதல்
உயிர் எல்லாம் ஜடத்தை போல் ஆவேனே
(அழகாய்..)

-அன்புடன்,
ஸ்ரீமதி.


5 பேர் உடன் ரசித்தவர்கள்:

kanavugalkalam said...

குணா படத்தில் இருந்து பார்த்த விழி பாடலை போடவும்.

கார்க்கிபவா said...

எனக்கு அவ்வை சன்முகி படத்தில் இருந்து வேலை வேலை காலையும் வேலை என்ற பாடல் வேணுங்க

Toto said...

அழகாய் பூக்குதே.. ந‌ல்ல‌ பாட‌ல் வ‌ரிக‌ளுக்கு ந‌ன்றி.

-Toto
www.pixmonk.com

CS. Mohan Kumar said...

அழகாய் பூக்குதே.. என் பெண்ணுக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு. நல்ல மெலடி. இந்த ப்ளாக்கே பாட்டுக்குன்னு அர்பனிசிடீங்க போல. நல்லா இருக்கு.

யூத் விகடநில் சமீபத்தில் வெளியான எனது கணவன் மனைவி சண்டை கட்டுரை (Humour) மற்றும் கவிதைகள் வாசிக்க நம்ம ப்ளாக் பக்கம் வரவும்

மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com

sathishsangkavi.blogspot.com said...

//அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொல்லாமல்
உள்ளங்கள் பந்தாடுதே//

அழகான வரிகள்.......