படம்: வைதேகி காத்திருந்தாள்
இசை: இளையராஜா
பாடியவர்: S. ஜானகி
வரிகள்: வைரமுத்து
அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்ப்லியும் புலம்புவது கேள்
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது
(அழகு..)
ஊதாத புல்லாங்குழல் ஒரு பொழுதும் சூடாத பூவின் மடல்
தேய்கின்ற மஞ்சல் நிலா ஒரு துணையைத் தேடாத வெள்ளைப் புறா
பூங்காற்றும் மெதுவாகப் பட்டாலும் போதும்
பொன்மேனி நெருப்பாகக் கொதிக்கின்றது
நீரூற்றுப் பாயாத நிலம்போல நாளும்
என் மேனி தரிசாக இருக்கின்றது
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை
இனிமை இல்லை வழ்வில் எதற்கு இந்த இளமை
பதிலேதும் இல்லாத கேள்வி
(அழகு..)
ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தள்ளாது
ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது
தாலாட்டில் சேராத தனிப்பாடல் ஒன்று
சங்கீதம் காணாமல் துடிக்கின்றது
விடியாத இரவென்றும் கிடையாது என்று
ஊர் சொன்ன வார்த்தைகள் பொய்யானது
வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெருமா
ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம்
வேரென்ன நான் செய்த பாவம்
(அழகு..)
விரும்பிக்கேட்டவர் UNGALODU NAAN .
-அன்புடன்,
ஸ்ரீமதி.
3 பேர் உடன் ரசித்தவர்கள்:
ஸ்ரீமதி,
இந்த பாடலின் instrumental version
இங்கு போய் கேளுங்கள்வீடியோவுடன்.
சற்று scroll செய்து கிழே வந்தால் இந்த வீடியோ வரும்.
http://www.ilayarajaonline.com/2009/09/ilayaraja-live-in-italy.html
வரவில்லை என்றால்
www.ilayarajaonline.com மில்
Blog Archive: Sep-09 "ilayaraja live in italy" என்று பாருங்கள்
"ilayaraja live in italy three in one" அல்ல.
நன்றி மேடம்
ஆனா இந்த பாட்டு எழுதியது வாலி அவர்கள்
மேடம் டிஷ்யூம் படத்தில் இருந்து பூமிக்கு வெளிச்சம் எல்லாம் பாடல் லிரிக்ஸ் போடவும்.
Post a Comment