படம் : அன்பே சிவம்
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ் & சாதனா சர்கம்
வரிகள்: வைரமுத்து.
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ் & சாதனா சர்கம்
வரிகள்: வைரமுத்து.
இசை: வித்யாசாகர்
பூ வாசம் புறப்படும் பெண்ணே
நான் பூ வரைந்தால்!
தீ வந்து விரல் சுடும் கண்ணே
நான் தீ வரைந்தால்!
உயிர் அல்லதெல்லாம்
உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்?
உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி
ம்ம்..புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்
உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்
கோடு கூட ஓவியத்தின் பாகமே
ஊடல் கூட காதல் என்று ஆகுமே
ஒரு வானம் வரைய நீலம் வண்ணம்
நம் காதல் வரை என்ன வண்ணம்?
உன் வெட்கத்தை விரல்தொட்டு
விரல் என்னும் கோல் கொண்டு
நம் காதல் வரைவோமே வா
பூ வாசம் புறப்படும் பெண்ணே
நான் பூ வரைந்தால்!
தீ வந்து விரல் சுடும் கண்ணே
நான் தீ வரைந்தால்!
ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது?
உற்று பார்க்கும் ஆளின்
கண்ணில் உள்ளது
பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது?
ஆண் தொடாத பாகம் தன்னில் உள்ளது
நீ வரைய தெரிந்த ஒரு நவீன கவிஞன்
பெண் வசியம் தெரிந்த ஒரு நலிந்த கவிஞன்
மேகத்தை ஏமாற்றி மண் சேரும் மழை போல
மடியோடு விழுந்தாயே,
வா வா............
பூ வாசம் புறப்படும் பெண்ணே
நான் பூ வரைந்தால்!
தீ வந்து விரல் சுடும் கண்ணே
நான் தீ வரைந்தால்!
-அன்புடன்,
ஸ்ரீமதி.
8 பேர் உடன் ரசித்தவர்கள்:
எனக்குப்பிடிச்ச பாடல்களில் ஒன்று.
ஹைய்..
ரொம்ப நாள் ஆச்சுன்னு நேத்துதான் அன்பே சிவம் பாத்தேன். எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு....
மிக அருமையான பாடல்......................is my favourite song.......thank u srimadhi madam.....
one of my fav song.
thanx for sharing.
//கோடு கூட ஓவியத்தின் பாகமே
ஊடல் கூட காதல் என்று ஆகுமே//
ஆஹா..அகைன் வைரமுத்து.. நச் பாட்டு.. டிபிக்கல் வித்யாசாகர் மெலடி
நல்ல பாட்டு..:))
my all time favorite.. :)
One of my favourite song. Very melodiouos. Often I hear this song.
Post a Comment