படம்: தீனா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ஹரிஹரன்
வரிகள்: விஜய் சாகர்
சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்
ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல
இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்
(சொல்லாமல் தொட்டு...)
ஓ காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்
நரக சுகம் அல்லவா
நெருப்பை விழுங்கி விட்டேன்
ஓ அமிலம் அருந்திவிட்டேன்
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்
மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே
ரகசியமாய் பூ பறித்தவள் நீதானே
(சொல்லாமல் தொட்டு...)
ஹே பெண்களின் உள்ளம் படு குழி என்பேன்
விழுந்து எழுந்தவன் யார்?
ஆழம் அளந்தவன் யார்? ஓ
கரையை கடந்தவன் யார்?
காதல் இருக்கும் பயத்தினில் தான்
கடவுள் பூமிக்கு வருவதில்லை
மீறி அவன் பூமி வந்தால்
தாடியுடன் தான் அலைவான் வீதியிலே....
(சொல்லாமல் தொட்டு...)
விரும்பிக்கேட்டவர் kanavugalkalam.
-அன்புடன்,
ஸ்ரீமதி.
4 பேர் உடன் ரசித்தவர்கள்:
எனக்கு மிகவும் பிடித்த பாடல்......நன்றீ
இந்த பாட்டு வரும்போதெல்லாம் அம்மா சவுண்ட் குறைப்பாங்க. ஏம்மான்னா அவன் கத்துரத பாரும்ப்பாங்க.. அவ்ளோ ஒன்றிப்போய் பாடுவார் அசீத்து..
நல்ல பாட்டு. :)
very good song
Post a Comment