படம்: கண்ணுக்குள் நிலவு.
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம்.
எந்தன் குயில் எங்கே என்று பார்த்தேன் என்று பார்த்தேன்
கொஞ்சும் குயிலோசை என்று கேட்பேன் என்று கேட்பேன்
கண்ணிலோர் ஓவியம் நெஞ்சிலோர் ஞாபகம்
சொல்வது யாரிடம் புரிந்ததா என் மனம்
என் நிலையில் கொஞ்சம் நின்று
சொல் சொல் சொல் கண்மணி
(எந்தன்)
கவிதை ஒன்றை நான் கண்டெடுத்தேன்
படித்திடுமுன் அது புயல் காற்றினில் பறந்ததடி
கனவினிலும் என் நினைவினிலும்
கவிதைக் குரல் தினம் எனை அடிக்கடி அழைக்குதடி
அற்புதம் காணாமல் கற்பனை ஏன் கண்டாய் (2)
வா எழுதலாம் எழுதலாம் புதிய கவிதைகளை
எந்தன் குயில் எங்கே என்று பார்த்தேன் என்று பார்த்தேன்
கொஞ்சும் குயிலோசை இன்று கேட்டேன் இன்று கேட்டேன்
கண்ணிலோர் ஓவியம் நெஞ்சிலோர் ஞாபகம்
சொல்வது யாரிடம் புரிந்ததா என் மனம்
என் நிலையில் கொஞ்சம் நின்று
சொல் சொல் சொல் கண்மணி
மரம் வளரும் கொஞ்சம் இலை உதிரும்
கவலை விடு இதோ புது வசந்தங்கள் வருகிறதே
அழகழகாய் இனி பூ மலரும்
ரசித்திருந்தால் அது புது வாழ்க்கையின் வாசம் தரும்
என் கதை நிலவறியும் ஓடிடும் முகிலறியும்(2)
என் வாசலின் தென்றலே மனதை வருடிவிடு
(எந்தன்)
விரும்பிக்கேட்டவர் கார்க்கி.
-அன்புடன்,
ஸ்ரீமதி.
4 பேர் உடன் ரசித்தவர்கள்:
ஹெட்ஃபோபோன் இல்லாததால் பாட்டு கேட்க முடியல.. ஆனா வீடியோவையே 5 தடவ பார்த்தேன்.. சூப்பர் :))
havent heard many times.. nice song..
ஒரு காலத்தில் என்னை அடிமையாக்கி வைத்திருந்த பாடல்... மீண்டும் நினைவுபடுத்தியதற்கு நன்றி. இதே படத்தில் வரும் "இரவு பகலை தேட" பாடலும் இனிய ஒன்று
தீன படத்தில் இருந்து சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் பாடலை போடவும்.........
Post a Comment