படம்: அமராவதி.
பாடியவர்: S.P.B.
இசை: பாலபாரதி.
வரிகள்: வைரமுத்து.

புத்தம்புது மலரே என் ஆசை சொல்லவா?
பொத்திவைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா?
இதயம் திறந்து கேட்கிறேன்
என்னதான் தருவாய் பார்க்கிறேன்...
நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன்..
நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன் தவித்தேன்....

(புத்தம் புது)

செல்லக் கிளி என்னைக் குளிப்பிக்க வேண்டும்
சேலைத் தலைப்பில் துவட்டிட வேண்டும்
கல்லுச் சிலைப் போல நீ நிற்க வேண்டும்
கண்கள் பார்த்துத் தலைவாரிட வேண்டும்
நீ வந்து இலைப் போட வேண்டும்
நான் வந்து பரிமாற வேண்டும்
என் விழி உன் இமை மூட வேண்டும்
இருவரும் ஒரு சுரம் பாட வேண்டும்
உன்னில் என்னைத் தேட வேண்டும்

(புத்தம் புது)

கன்னி உந்தன் மடி சாய வேண்டு்ம்
கம்பன் வரிகள் நீ சொல்ல வேண்டும்
உன்னைக் கட்டிக்கொண்டு தூங்க வேண்டும்
உந்தன் விரல் தலைக் கோதிட வேண்டு்ம்
கண்ணோடு இதம் காண வேண்டும்
கண்ணீரில் குளிர்காய வேண்டும்
உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம் வேண்டும்
உயிருக்குள் உயிர் சென்று சேர வேண்டும்
தாயாய் சேயாய் மாற வேண்டும்...

(புத்தம் புது)

-அன்புடன்,
ஸ்ரீமதி.



6 பேர் உடன் ரசித்தவர்கள்:

சென்ஷி said...

அருமையான பாடல்!

Anonymous said...

அழகான வரிகள், இனிமையான இசை இந்த படத்தில் அனைத்து பாடல்களும் அபாரம். பதிந்தற்க்கு நன்றி.

Anonymous said...

அழகான பாட்டு.

மாயாவி படத்துல தந்திரனே சந்திரனே பாட்டு கேட்டிருந்தே கொஞ்ச நாள் முன்னாடி. மறந்துட்டீங்களா

Anonymous said...

சந்திரனே சந்திரனே சந்திர சுந்தரனே எனை இந்திரமாக மாற்றிய மந்திரனே
சந்திரியே சந்திரியே சந்திர சுந்தரியே

kanavugalkalam said...

மோனிசா என் மோனலிசா படத்தில் இருந்து காதல் தேடி வாழ்ந்த காளை....

Karthik said...

கலக்கல் பாட்டு. :)

கார்க்கியை எங்க காணோம்? :(