எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று

படம்: கேப்டன் மகள்.
இசை: அம்சலேகா.

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ, அது ஏதோ?
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது!
அதை அறியாமல் விடமாட்டேன்!
அது வரை உன்னைத் தொடமாட்டேன்!

(எந்த பெண்ணிலும்)

கூந்தல் முடிகள், நெற்றி பரப்பில்
கோலம் போடுதே அதுவா?
கோலம் போடுதே அதுவா?
சிரிக்கும் போது கண்ணில் மின்னல்
தெரித்து ஓடுதே அதுவா?
தெரித்து ஓடுதே அதுவா?
மூக்கின் மேலே மூக்குத்தி போலே
மச்சம் உள்ளதே அதுவா?அதுவா? அதுவா?
கழுத்தின் கீழே கவிதைகள் ரெண்டு
மிச்சம் உள்ளதே அதுவா? அதுவா? அதுவா?

அதை அறியாமல் விடமாட்டேன் !
அது வரை உன்னைத் தொடமாட்டேன்!

(எந்த பெண்ணிலும்)

முல்லை நிறத்துப் பற்களில் ஒன்று
தள்ளி உள்ளதே அதுவா?
தள்ளி உள்ளதே அதுவா?
சங்கு கழுத்தைப் பாசி மணிகள்
தடவுகின்றதே அதுவா?
தடவுகின்றதே அதுவா?
ஒவ்வொரு வாக்கியம் முடியும் போதும்
புன்னகை செய்வாய் அதுவா? அதுவா? அதுவா?
ஓரிரு வார்தை தப்பாய் போனால்
உதடு கடிப்பாய் அதுவா? அதுவா? அதுவா?
அதை அறியாமல் விடமாட்டேன்!
அது வரை உன்னை தொடமாட்டேன்!

(எந்த பெண்ணிலும்)

விரும்பிக்கேட்டவர் இரா.சிவக்குமரன்.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


9 பேர் உடன் ரசித்தவர்கள்:

வந்தியத்தேவன் said...

இசை இளையராஜா அல்ல அம்சலேகா.

கார்க்கி said...

/இசை இளையராஜா அல்ல அம்சலேகா//

இதைத்தான் சொல்ல வந்தேன்...

ஸ்ரீமதி said...

//வந்தியத்தேவன் said...
இசை இளையராஜா அல்ல அம்சலேகா.//

புதிய தகவல் :)) நன்றி அண்ணா. :))

நன்றி கார்க்கி :))

இரா.சிவக்குமரன் said...

ஆனாலும் ரொம்ப fast- க்கா.

இரா.சிவக்குமரன் said...

http://www.metacafe.com/watch/1443583/endha_pennilum_illadha_ondru_from_captain_magal/

இரா.சிவக்குமரன் said...

http://www.metacafe.com/watch/1443583/endha_pennilum_illadha_ondru_from_captain_magal/

Karthik said...

நல்ல பாட்டு.. எனக்கு ஸ்ருதி ஹாசன் ஞாபகத்து வராங்க.. :))

ஆளவந்தான் said...

ஹசிலி பிசிலி பாட்டு எழுதியிருக்கீங்களா??

Anonymous said...

பாட்டு எழுதுனது வைரமுத்துவா?