படம்: புதிய பறவை.
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக்கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திடக்கண்டேனே
மொட்டு விரித்த மலரினிலே வண்டு மூழ்கிடக்கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து மோதிடக்கண்டேனே- நான்
(சிட்டுக்குருவி)
பறந்து செல்ல நினைத்துவிட்டேன் எனக்கும் சிறகில்லையே
பருவம் வந்தேன் தழுவ வந்தேன் பறவைத் துணை இல்லையே
எடுத்துச்சொல்ல மனம் இருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே ஹோய்..
(சிட்டுக்குருவி)
ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனாம்
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனாம்
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனாம்
இளமைத் தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனாம் ஹோய்..
(சிட்டுக்குருவி)
விரும்பிக்கேட்டவர் கார்க்கி.
-அன்புடன்,
ஸ்ரீமதி.
9 பேர் உடன் ரசித்தவர்கள்:
நன்றி யக்கோவ்வ்....
கார்க்கி அங்கிள்னு நினெச்சேன். இது அதையும் தாண்டி...
என்னோட யூத் டேஸ்ட்டுக்கு எத்த பாட்டு என்ன இருக்குன்னு பாத்தேன். 'ஹசிலி ஃபிஸிலி என் ரசமணி' இருக்கு. தேங்க்ஸ்.
அனுஜன்யா
யார் பாடினது? யார் எழுதினது? யார் இசை? :))
P SUSHEELA/KANNADASAN
MAM VAIDHEKI KATHIRUNDAL PADATIL IRUNDU AZHAGU MALAR AADA LYRICS EZHUDUNGALEN
SINGER:P SUSHEELA
LYRICS:KANNADASAN
MUSIC :M.S.V
நல்ல சேவை.. தொடர்ந்து எழுதுங்க ஸ்ரீமதி
-Toto
www.pixmonk.com
//அனுஜன்யா said...
கார்க்கி அங்கிள்னு நினெச்சேன். இது அதையும் தாண்டி...
என்னோட யூத் டேஸ்ட்டுக்கு எத்த பாட்டு என்ன இருக்குன்னு பாத்தேன். 'ஹசிலி ஃபிஸிலி என் ரசமணி' இருக்கு. தேங்க்ஸ்//
ரெண்டு படத்திலும் சரீஜாதேவி இருக்காங்க தல..
நீங்க வாராயோ பாடல் கேட்கலாம். அதிலும் சரோஜாதேவி வருவாங்க :))
Super. This song was sang by a kid in Airtel Super Singer Junior, it just remembers me.....
Post a Comment