படம் : இந்திரா
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர் : ஹரிணி / ஹரிஹரன்
வரிகள் : வைரமுத்து


நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்

.......... நிலா காய்கிறது .........

அதோ போகின்றது ஆசை மேகம் மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்
இந்த வாழ்க்கையே சீதனம் உங்கள் தேவையைத் தேடுங்கள்

.......... நிலா காய்கிறது .........



நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்

.......... நிலா காய்கிறது .........

அதோ போகின்றது கானல் மேகம் மழையை காணவில்லையே
இதோ கேட்கின்றது குயிலின் சோகம் இசையும் கேட்கவில்லையே
இந்த பூமியே பூவனம் எந்தன் பூவிதழ் சருகுதே
இந்த வாழ்கையே சீதனம் அதில் ஜீவனே தேயுதே

.......... நிலா காய்கிறது .........

விரும்பிக்கேட்டவர் கார்த்திக்.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


2 பேர் உடன் ரசித்தவர்கள்:

கார்க்கிபவா said...

வாவ்.. என்ன பாட்டு!!!

/இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்//

மீண்டும் வைரமுத்து..

ஹரிணியின் முதல் பாடல். அந்த பொக்கை வாய் குழந்தை பாடும் அழகு.. ச்சே..

சீக்கிரம் கல்யாணம் பண்ணுடா கார்க்கீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

எனக்கு சத்தம் போடாதே படத்தில் அழகு குட்டி செல்லம் பாட்டு வேணுமே

Karthik said...

நன்றி.. :)

//சீக்கிரம் கல்யாணம் பண்ணுடா கார்க்கீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

:))