காதல் கவிதைகள்

Yes.. I Love This Idiot!
I Love this Lovable Idiot!

காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இது காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் ஒரு மோகம்
இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும்
அமுதம் வழிந்தோடும் அழகில் கலந்தாடும்
இதம் தரும்(காதல்..)

கை வீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல்
இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ
பண்பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும்
இது மழையோ புயலோ நதியோ கலையழகோ
மேகமொன்று நேரில் இங்கு வாழ்த்த வந்ததடி
தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக் கொண்டதடி
இது தொடரும் மலரும் வளரும்
இனி கனவும் நினைவும் உனையே தொடர்ந்திடும்(காதல்..)

பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும்
உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை
தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை
எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தால் அது புதுமை
கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபமல்லவா
காதலுக்கு காத்திருந்து காட்சி தந்ததோ
இனி வருவாய் தருவாய் மலர்வாய்
எனை உயிராய் உறவாய் தொடர்வாய் தினம் தினம்(காதல்..)


9 பேர் உடன் ரசித்தவர்கள்:

Saravana Kumar MSK said...

உன்னோட இந்த தளத்துக்கே, me the first.. :)

தமிழன்-கறுப்பி... said...

me the 2nd!

தமிழன்-கறுப்பி... said...

\\
எனக்கு பிடித்த பாடல் அது உனக்கு பிடிக்குமே....
\\

எல்லா பாட்டுக்கும் இது செட்டாகாதுங்கோ :)

தமிழன்-கறுப்பி... said...

நேயர் விருப்பம் போடுவிங்களா?

தமிழன்-கறுப்பி... said...

me the 5th!

ஆயில்யன் said...

//கை வீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல்
இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ
பண்பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும்
இது மழையோ புயலோ நதியோ கலையழகோ
மேகமொன்று நேரில் இங்கு வாழ்த்த வந்ததடி
தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக் கொண்டதடி
இது தொடரும் மலரும் வளரும்
இனி கனவும் நினைவும் உனையே தொடர்ந்திடும்(காதல்..)///


வரிகளை விட, வார்த்தைகள் தொடர்ந்து வந்து விழும் குரலில் ஏனோ ஒரு ஈர்ப்பு இந்த கட்டத்தில்...!

சூப்பர் பாட்டு :)))

ஆயில்யன் said...

//Yes.. I Love This Idiot!
I Love this Lovable Idiot!//


ஆமாம் இது தமிழ்ல சொல்லுவாங்களா? இல்ல இங்கீலிசுலயா???

(எதுல சொன்னா என்னன்னு டெரரா பதில் வரப்பிடாது ஆமாம்!)

ஸ்ரீமதி said...

நன்றி சரவணா முதல் வருகைக்கு :))

நன்றி தமிழன் அண்ணா :))) அப்போ உங்களுக்கு பிடிச்ச பாட்டு சொல்லுங்க போட்டுடலாம்.. :)))

நன்றி ஆயில்யன் அண்ணா :)) உண்மைதான் அண்ணா எனக்குமே வரிகளைவிட அந்த குரல்கள் ரொம்ப பிடிக்கும் இந்த பாட்டுல.. :)) அதுதான் இந்த பாடலோட வெற்றின்னு நினைக்கிறேன்.. :)) இதெல்லாம் நான் பிறக்கறதுக்கு முன்னாடி வந்த பாடல்..:D இங்கிலீஷ்ல தான் சொல்வாங்கன்னு நினைக்கிறேன். :))

சக்தி said...

enakku pidicha paatu