படம்: தாளம்
இசை: A.R. ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம், ஷோபா

எங்கே என் புன்னகை
எவர் கொண்டு போனது
தீ பட்ட மேகமாய்
என் நெஞ்சு ஆனது
மேக தீ அணைக்க வா வா வா வா
தாளத்தில் நீ சேரவா ஓ
தாளிசை நான் பாடவா

[எங்கே என் புன்னகை...]

மழை நீரில் மேகமோ
தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில்
வெட்கம் ஏன் கரைந்தது
மழை நீரில் மேகமோ
தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில்
வெட்கம் ஏன் கரைந்தது
என் நாடி போலவே என் நெஞ்சம் குலைந்தது
நீ செய்யும் லீலையை நீர் செய்ய மனம் ஏங்குது
முதிலையில் நனைந்ததை முத்தத்தால் காயவை
எந்தன் தனிமையை தோள் செய்யவா
தாளத்தில் நீ சேரவா ஓ
தாளிசை நான் பாடவா

பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ
பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ
கண்ணே உன் நெஞ்சமோ கடல் கொண்ட ஆழமோ
நம் சொந்தம் கூடுமோ
ஒளியின் நிழல் ஆகுமோ
காதல் மழை பொழியுமோ
கண்ணீரில் இரங்குமோ
அது காலத்தின் முடிவல்லவோ
தாளத்தில் நீ சேரவா ஓ
தாளிசை நான் பாடவா

[எங்கே என் புன்னகை...]

-அன்புடன்,
ஸ்ரீமதி.


3 பேர் உடன் ரசித்தவர்கள்:

ஆயில்யன் said...

நல்ல பாட்டு எனக்கு ரொம்ப புடிச்சதும் கூட....!

Vidhya Chandrasekaran said...

ஸ்ரீ அடுத்த நேயர் விருப்பம் அயன் படத்திலிருந்து நெஞ்சே நெஞ்சே பாட்டு:)

Vishnu - விஷ்ணு said...

ஆமாங்க நானும் வித்யா சொல்லுறத வழி மொழிகிறேன். கொஞ்சம் புது பாட்டு போடுங்க