படம்: அயன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்கள்: மஹதி, ஹரிஷ் ராகவேந்தரா

ஹ ஹ ஹ
ஹூம் ஹூம்
ஹ ஹ
ஹூம் ஹூம் ஹூம் ம்ம்ம்ம்

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே

என் ந‌தியே என் க‌ண் முன்னால் வ‌ற்றிப் போனாய்
வான் ம‌ழையாக‌ என்னை தேடி ம‌ண்ணில் வ‌ந்தாய்
என் தாக‌ங்க‌ள் தீர்க்காம‌ல் க‌ட‌லில் ஏன் சேர்கிறாய்.

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே.

க‌ண்ணே என் க‌ண்ணே நான் உன்னைக் காணாம‌ல்
வானும் என் ம‌ண்ணும் பொய்யாக‌க் க‌ண்டேனே.

அன்பே பேர‌ன்பே நான் உன்னைச் சேராம‌ல்
ஆவி என் ஆவி நான் ஏற்றுப் போனேனே

வெயில் கால‌ம் வ‌ந்தால்தான் நீரும் தேனாகும்
பிரிவொன்றை க‌ண்டால்தான் காத‌ல் ருசியாகும்

உன் பார்வை ப‌டும் தூர‌ம் என் வாழ்வின் உயிர் நீளும்
உன் மூச்சு ப‌டும் நேர‌ம் என் தேக‌ம் அன‌லாகும்

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே

அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே

க‌ள்வா என் க‌ள்வா நீ காத‌ல் செய்யாம‌ல்
க‌ண்ணும் என் நெஞ்சும் என் பேச்சைக் கேட்காதே

காத‌ல் மெய் காத‌ல் அது ப‌ட்டுப் போகாதே
காற்றும் நாம் பூமி ந‌மை விட்டுப் போகாதே

ஆகாய‌ம் இட‌ம் மாறிப் போனால் போக‌ட்டும்
ஆனால் நீ ம‌ன‌ம் மாறிப் போக‌க் கூடாதே

ஏ ம‌ச்ச‌த் தாம‌ரையே
என் உச்ச‌த் தார‌கையே
க‌ட‌ல் ம‌ண்ணாய் போனாலும்
ந‌ம் காத‌ல் மாறாதே

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே

அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே
என் ந‌தியே என் க‌ண் முன்னே வ‌ற்றிப் போனாய்
வான் ம‌ழையாக‌ எனை தேடி ம‌ண்ணில் வ‌ந்த்தாய்

உன் தாக‌ங்க‌ள் தீராம‌ல் ம‌ழையே
ஏன் வ‌ருகிறாய்

ஹ ஹ ஹ ஹூம் ஹூம் ஹா ஹ ஹ ம்ம்ம் ம்ம்ம்
ஹ ஹ ஹ ஹூம் ஹூம் ஹா ஹ ஹ ம்ம்ம் ம்ம்ம்

-அன்புடன்,
ஸ்ரீமதி.



5 பேர் உடன் ரசித்தவர்கள்:

Vidhya Chandrasekaran said...

லவ்லி. ரொம்ப நன்றி ஸ்ரீமதி:)

Anonymous said...

இது எப்போதிலிருந்து? கொஞ்ச லேட் எண்ட்ரி... :-(

நிஜமா நல்லவன் said...

:)

அபி அப்பா said...

சூப்பர் பாட்டு! எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு!

கார்க்கிபவா said...

எனக்கு ஷாஜஹான் படத்தில் வரும் மனிதா மனிதா பாடல் வேண்டும்..

கடந்தவர் இருப்பார் கரையில் கரையில்
கடத்திய படகோ அலையில் அலையில்..


மாலையில் போடு.. இப்ப போட்டா என் வேலை கெட்டு போயிடும்.. :))