படம்: வசீகரா
இசை: S.A.ராஜ்குமார்
வரிகள்: பா.விஜய்
பாடியவர்கள்: மகாலக்ஷ்மி ஐயர், ஸ்ரீநிவாஸ்.
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது,
கண்கள் ஒரு நொடி பார் என்றது,
ரெண்டு கரங்களும் சேர் என்றது,
உள்ளம் உனக்குத்தான் என்றது,
சத்தமின்றி உதடுகளோ
முத்தம் எனக்கு தா என்றது,
உள்ளம் என்ற கதவுகளோ
உள்ளே உன்னை வா என்றது,
(நெஞ்சம்)
நீதான் நீதான் எந்தன் உள்ளம் திறந்து,
உள்ளே உள்ளே வந்த முதல் வெளிச்சம்,
நீதான் நீதான் எந்தன் உயிர் கலந்து,
நெஞ்சை நெஞ்சை தொட்ட முதல் ஸ்பரிசம்,
கன்னம் என்னும் தீ அணைப்பு துறையில்,
உன் முத்தம்தானே பற்றிக்கொண்ட முதல் தீ,
கிள்ளும்போது எந்தன் கையில் கிடைத்த,
உன் விரல்தானே நானும் தொட்ட முதல் பூ,
உன் பார்வைதானே எந்தன்
நெஞ்சில் முதல் சலனம்,
அன்பே, என்றும் நீ அல்லவா,
கண்ணால் பேசும் முதல் கவிதை,
காலமுள்ள காலம் வரை,
நீதான் எந்தன் முதல் குழந்தை,
(நெஞ்சம்)
காதல் என்றால் அது பூவின் வடிவம்,
ஆனால் உள்ளே அது தீயின் உருவம்,
காதல் வந்தால் இந்த பூமி நழுவும்,
பத்தாம் கிரகம் ஒன்றில் பாதம் பரவும்,
காதல் வந்து நெஞ்சுக்குள்ளே நுழையும்,
ஒரு தட்ப வெப்ப மாற்றங்களும் நிகழும்,
காதல் வந்து கண்ணை தொட்டு எழுப்பும்,
அது ஊசி ஒன்றை உள்ளுக்குள்ளே அனுப்பும்,
இந்த காதல் வந்தால்
இலை கூட மலை சுமக்கும்,
காதல் என்ற வார்த்தையிலே,
ஒன்றாய் சேர்ந்து நாம் தொலைவோம்,
காதல் என்ற காற்றினிலே,
தூசி போல நாம் அலைவோம்,
(நெஞ்சம்)
ஸ்ரீமதி.
இசை: S.A.ராஜ்குமார்
வரிகள்: பா.விஜய்
பாடியவர்கள்: மகாலக்ஷ்மி ஐயர், ஸ்ரீநிவாஸ்.
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது,
கண்கள் ஒரு நொடி பார் என்றது,
ரெண்டு கரங்களும் சேர் என்றது,
உள்ளம் உனக்குத்தான் என்றது,
சத்தமின்றி உதடுகளோ
முத்தம் எனக்கு தா என்றது,
உள்ளம் என்ற கதவுகளோ
உள்ளே உன்னை வா என்றது,
(நெஞ்சம்)
நீதான் நீதான் எந்தன் உள்ளம் திறந்து,
உள்ளே உள்ளே வந்த முதல் வெளிச்சம்,
நீதான் நீதான் எந்தன் உயிர் கலந்து,
நெஞ்சை நெஞ்சை தொட்ட முதல் ஸ்பரிசம்,
கன்னம் என்னும் தீ அணைப்பு துறையில்,
உன் முத்தம்தானே பற்றிக்கொண்ட முதல் தீ,
கிள்ளும்போது எந்தன் கையில் கிடைத்த,
உன் விரல்தானே நானும் தொட்ட முதல் பூ,
உன் பார்வைதானே எந்தன்
நெஞ்சில் முதல் சலனம்,
அன்பே, என்றும் நீ அல்லவா,
கண்ணால் பேசும் முதல் கவிதை,
காலமுள்ள காலம் வரை,
நீதான் எந்தன் முதல் குழந்தை,
(நெஞ்சம்)
காதல் என்றால் அது பூவின் வடிவம்,
ஆனால் உள்ளே அது தீயின் உருவம்,
காதல் வந்தால் இந்த பூமி நழுவும்,
பத்தாம் கிரகம் ஒன்றில் பாதம் பரவும்,
காதல் வந்து நெஞ்சுக்குள்ளே நுழையும்,
ஒரு தட்ப வெப்ப மாற்றங்களும் நிகழும்,
காதல் வந்து கண்ணை தொட்டு எழுப்பும்,
அது ஊசி ஒன்றை உள்ளுக்குள்ளே அனுப்பும்,
இந்த காதல் வந்தால்
இலை கூட மலை சுமக்கும்,
காதல் என்ற வார்த்தையிலே,
ஒன்றாய் சேர்ந்து நாம் தொலைவோம்,
காதல் என்ற காற்றினிலே,
தூசி போல நாம் அலைவோம்,
(நெஞ்சம்)
- விரும்பிக்கேட்டவர் கார்க்கி.
ஸ்ரீமதி.
12 பேர் உடன் ரசித்தவர்கள்:
நினைச்சேன்..கார்க்கியாத்தான் இருக்கும்னு..!
ரொம்ப தாங்க்ஸ்
இந்த பாட்டுக்கு பின்னாடி ஒரு கதையே இருக்கு.. :))
//கன்னம் என்னும் தீ அணைப்பு துறையில்,
உன் முத்தம்தானே பற்றிக்கொண்ட முதல் தீ,
கிள்ளும்போது எந்தன் கையில் கிடைத்த,
உன் விரல்தானே நானும் தொட்ட முதல் //
இந்த பா.விஜய் இப்ப ஏன் இபடி ஆயிட்டாரு?
எனக்கு “ஒரு காதலிலே மொத்தம் ஏழுநிலை” அந்தப் பாட்டு வேணும் :)
//இந்த பாட்டுக்கு பின்னாடி ஒரு கதையே இருக்கு.. :))///
இதுக்கு முன்னாடி ஓடுன பாட்டுக்கெல்லாம் பல கதைகள் இருக்கு எனக்கு :)))
//எம்.எம்.அப்துல்லா said...
எனக்கு “ஒரு காதலிலே மொத்தம் ஏழுநிலை” அந்தப் பாட்டு வேணும் :)
//
தம்பி எந்த நிலைமையில இருக்கீங்க !
//எம்.எம்.அப்துல்லா said...
எனக்கு “ஒரு காதலிலே மொத்தம் ஏழுநிலை” அந்தப் பாட்டு வேணும் :)
///
இந்த மாதிரி பாட்டு ரொம்ப நாளா கேட்டு கேட்டுத்தான் நடுத்தெரு நிலைமையில நான் இருக்கேன் :)
//காதல் என்ற காற்றினிலே,
தூசி போல நாம் அலைவோம்,//
எப்ப செட்டிலாகுறது....???
//காதல் வந்து கண்ணை தொட்டு எழுப்பும்,
அது ஊசி ஒன்றை உள்ளுக்குள்ளே அனுப்பும்,//
அந்த ஊசிதான் பெறவு ராட்சத கடப்பாரையாகி ஆளையே காலி பண்ணும் :(
மீ த பத்தேய்ய்ய்ய்!
இதுக்கு மேல கும்மியடிச்சா அடிச்சு பத்து போட வைச்சாலும் வைச்சுப்புடுவாங்க !
மீ த எஸ்கேப்ப்ப்ப்!
//இந்த மாதிரி பாட்டு ரொம்ப நாளா கேட்டு கேட்டுத்தான் நடுத்தெரு நிலைமையில நான் இருக்கேன் :)
//
நானும் தெருவுலதான்ணே இருந்தேன், ஜஸ்ட் இப்பத்தான் திண்ணைக்கு ஸிப்ட் ஆயிருக்கேன்
:)
நன்றி டக்ளஸ்
நன்றி கார்க்கி.. ஆமா ஒரு கத இருக்கு.. மூணு மணி நேரம் தானே?? நான் பார்த்திருக்கேன்.. ;))
நன்றி அப்துல்லா அண்ணா
நன்றி ஆயில்யன் அண்ணா
Post a Comment