படம்: நேருக்கு நேர்
இசை: தேவா
வரிகள்: வைரமுத்து
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், ஹரிணி

மனம் விரும்புதே உன்னை... உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா


(மனம்.....)


அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது
புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்
மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே....
மீண்டும் காண.... மனம் ஏங்குதே...


(நினைத்தாலே.....)


மழையோடு நான் கரைந்ததுமில்லை
வெயிலோடு நான் உருகியதில்லை
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா
மலைநாட்டுக் கரும்பாறை மேலே
தலை காட்டும் சிறு பூவைப்போலே
பொல்லாத இளங்காதல் பூத்ததடா
சட்டென்று சலனம் வருமென்று
ஜாதகத்தில் சொல்லலையே...
நெஞ்சோடு காதல் வருமென்று
நேற்றுவரை நம்பலையே
என் காதலா...! என் காதலா.....!
நீ வா! நீ வா! என் காதலா...!


(நினைத்தாலே.....)

-அன்புடன்,
ஸ்ரீமதி.



7 பேர் உடன் ரசித்தவர்கள்:

ஆயில்யன் said...

ஒரு காலத்தில ரொம்ப ரசிச்ச பாட்டு :)

சிம்ரன் டான்ஸ் சூப்பரா இருக்கும் :))

ஆயில்யன் said...

//விரும்பிக்கேட்டவர் ஸ்ரீமதி. ;-))-//


:))

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அதெல்லாம் ஒரு காலம்

இது நம்ம ஆளு said...

நல்ல பதிவு
அக்கா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

Maddy said...

இப்படி ஒரு நேயர் விருப்பம் ஆரம்பிச்சதை சொல்லவே இல்லையே?? விருப்ப பாடலை எந்த நெம்பருக்கு sms செய்யணும்?? 9 ல ஆரம்பிச்சு 9 ல முடியற நெம்பரா சொன்ன பரவ இல்லை. என் செல் ல வேற நம்பர் எல்லாம் ரிப்பேர்

தமிழன்-கறுப்பி... said...

\\
ஆயில்யன் said...
ஒரு காலத்தில ரொம்ப ரசிச்ச பாட்டு :)

சிம்ரன் டான்ஸ் சூப்பரா இருக்கும் :))
\\


ரிப்பீட்டு :))

but இப்பவும் ரசிக்கிற பாட்டுத்தான் !

Unknown said...

நன்றி ஆயில்யன் அண்ணா.. சிம்ரன்?? ம்ம்ம்ம்ம் :)))

நன்றி சுரேஷ் அண்ணா.. ஏன் இப்போ என்ன?? :))

நன்றி இது நம்ம ஆளு.. வாழ்த்துகள்.. :))

நன்றி மேடி அண்ணா.. மெயில்ல கூட சொல்லலாம்.. :))

நன்றி தமிழன் கறுப்பி அண்ணா