படம்: ஜீலி கணபதி.
பாடியவர்: ஷ்ரேயா கோஷல்.
இசை: இளையராஜா.
வரிகள்: நா. முத்துகுமார்.

எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவு
அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா?

(எனக்குப் பிடித்த)

பித்துப் பிடித்ததைப் போல
அடி பேச்சு குழறுதே
வண்டு குடைவதைப் போலே
விழி மனசைக் குடையுதே
காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்.

(எனக்குப் பிடித்த)

வெள்ளிக் கம்பிகளைப் போல
ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணும் வந்து சேர
அது பாலம் போடுதோ
நீர்த்துளி தீண்டினால்
நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம்
வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய்
அன்பிலே அணைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைக்கிறாய்

-அன்புடன்,
ஸ்ரீமதி.


6 பேர் உடன் ரசித்தவர்கள்:

கார்க்கிபவா said...

//வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்.
//

இந்த வரிகளை கேட்கும் போதெல்லாம் ஒரு விதமான உணர்வு எழும் எனக்குள். என்ன பாட்டு? அதுவும் ஷ்ரேயாவின் உச்சரிப்பு இந்தப் பாட்டில் அற்புதம்

goma said...

அருமையான பாடல் அது எல்லோருக்கும் பிடிக்குமே

Anonymous said...

ஷ்ரேயாவின் குரலுக்காகவே நான் கேக்கற பாட்டு

கார்க்கிபவா said...

எனக்கு என் சுவாச காற்றே படத்தில், திறக்காத காட்டுக்குள்ளே பாட்டு வேணுமே

புதுப்பாலம் said...

பாடல் வரிகளை தந்த நீங்கள் அந்த பாடல்களுக்கான (MP3 & AVI) சுட்டியையும் அதில் தந்திருந்தால் படிப்பவர்கள் பாடலை கேட்டும், பார்த்தும் ரசிக்க முடியும்.

அன்புடன்
இஸ்மாயில் கனி
ஜித்தா

Karthik said...

நல்ல பாட்டு..:)

@கார்க்கி : இது ஷ்ரேயா கோஷலோட ஃபர்ஸ்ட் தமிழ் பாட்டா?