படம்: தாஜ்மஹால்
இசை: A.R.ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன்,ஸ்வர்ணலதா

குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி
கடலிலே தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால் காதலின் உறவுகள் எரிவதில்லை

குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி

இதயத்தில் வலி ஒன்று வருது
உன் இமைகளின் முடிக் கொண்டு தடவு
நெஞ்சுக்குள்ளும் எரியுது நெருப்பு
இதை நீர் கொண்டு அணைப்பது உன் பொறுப்பு

இது தண்ணீர் ஊற்றியா தீரும்
நான் பன்னீர் ஊற்றினால் மாறும்

தேகங்கள் பரிமாற நம் உள்ளங்கள் இடமாறும்
பேரின்ப பூசைகளே உன் பெண்மைக்கு பரிஹாரம்

மழை இல்லாமலும் தென்றல் சொல்லாமலும்
நம் நெஞ்சுக்குள் இப்போது லட்சம் பூ மலரும்

குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி

நெஞ்சுக்குழி விட்டு விட்டு துடிக்கும்
அடி நெருப்புக்குள் ஏன் இந்த நடுக்கம்
முகத்துக்கும் முகத்துக்கும் சண்டையா
அட முத்தமிட வேறு இடம் இல்லையா

மழைத்துளி மழைத்துளி தொல்லையா
அட ஆடை மழை காக்க எண்ணம் இல்லையா

சுற்றி எல்லாம் எரிகின்ற போதும்
நாம் இன்பம் கொள்வது தீது

அடி பூகம்ப வேளையிலும்
இரு வான் கோழி கலவிக்கொள்ளும்

தேகத்தை அணைத்து விடு
சுடும் தீக்கூட அணைந்துவிடும்

அட உன் பேச்சிலும் விடும் உன் மூச்சிலும்
சுற்றி நின்றாடும் தீவண்ணம் அணைவது திண்ணம்

குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி
கடல் அலை தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால் காதலின் உறவுகள் எரிவதில்லை

-அன்புடன்,
ஸ்ரீமதி.

4 பேர் உடன் ரசித்தவர்கள்:

Raju said...

Super Song...

ஆளவந்தான் said...

எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்...ஆமா, இதை விரும்பி கேட்டது யாருங்க :)

Unknown said...

நன்றி டக்ளஸ்

நன்றி ஆளவந்தான் அண்ணா.. நீங்க கேட்டதா போட்டுடவா?? எனக்கு பிடிச்ச பாடல்.. :))

Vishnu - விஷ்ணு said...

அருமையான பாடல்