வரிகள்: தாமரை
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஹரன், தேவன், V.பிரசன்னா
படம் : வாரணம் ஆயிரம்

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாமரை
பொன்வண்ணம் சூடிடும் காரிகை
பெண்ணே நீ காஞ்சனை

ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி

(நெஞ்சுக்குள்..)

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தன்ம் ஏதும் இல்லா
புன்னகையோ போகும்மில்லா

நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்

இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதேபோகாதே..

(நெஞ்சுக்குள்...)

தூக்கங்களை தூக்கிச் சென்றாள்
தூக்கி சென்றாள்..
ஏக்கங்களை தூவிச் சென்றாள்
உன்னை தாண்டி போகும் போது
போகும் போது..

வீசும் காற்றின் வீச்சிலே
நில்லென்று நீ சொன்னால்
என் காதல் நகராதே
நீ சூடும் பூவெல்லாம்
ஒரு போதும் உதிராதே
காதல் எனை கேட்கவில்லை
கேட்டால் அது காதல் இல்லை

என் ஜீவன் ஜீவன் நீதானே
என தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே

(நெஞ்சுக்குள்..)

-அன்புடன்,
ஸ்ரீமதி.


5 பேர் உடன் ரசித்தவர்கள்:

TKB காந்தி said...

நன்றி ஸ்ரீ. பிரத்யேகமா பாடல்களுக்கான வலைப்பூ, நல்ல யோசனை. உங்க template taste இது இல்லையே ;)

விரும்பிக்கேட்டவர் TKB காந்தி.// நீங்க blog jockeyயா? ;)

dharshini said...

super song sri.
// விரும்பிக்கேட்டவர் TKB காந்தி.// நீங்க blog jockeyயா? ;)//

அப்படின்னா எனக்கும் ஒரு பாட்டு போட்ரு sri அந்த பாடல் அமராவதி பட‌த்தில் இருந்து புத்தம் புது மலரே ஓக்கேவா?!
:)

ஆயில்யன் said...

பாஸ் நீங்க கனவுல நொம்ப இசைக்குறீங்கோ அந்த அளவுக்கு பாஸ்டா எங்களால பாடமுடியாது :(

ஆயில்யன் said...

எங்களுக்கு பகலெல்லாம் ஆபிஸு ஸோ இரவுதான் பாட்டு பாடமுடியும் !

உங்களுக்கு பகலெல்லாம் ஆபிஸு ஸோ பகலெல்லாம் கனவு காணமுடியும் !

:(((

ஆயில்யன் said...

//நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ///

வாவ் ....!

தற்கால பொருளாதாரத்தையும் மிக்ஸ் பண்ணியிருக்காங்க !

வெரிகுட் இன்னிக்குத்தான் நானே பாக்குறேன்!